மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால தலைமைத்துவத்திற்கு மத்திய அமைச்சரவை வாழ்த்துத் தெரிவித்து தீர்மானம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 3:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு வாழ்த்துத் தெரிவித்து மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இது வழக்கமான பாராட்டு என்பதற்கு அப்பால், நாட்டிற்கு முன்னுரிமை, குடிமக்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையால் வழிநடத்தப்பட்ட பிரதமர் மோடியின் பெரும் பயணத்தைக் கொண்டாடுகிறது. குஜராத்தில் மூன்று முறை மகத்தான வெற்றிகளும், அடுத்தடுத்து  நடைபெற்ற மூன்று மக்களவை தேர்தல்களில் பெற்ற ஆதரவு பிரதமர் திரு நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நீடித்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. 

குஜராத்தின் வெற்றிகரமான முன்முயற்சிகளைத் தேசிய அளவில் பிரதமர் திரு மோடி எவ்வாறு முன்னெடுத்துச் சென்றார் என்பதை இத்தீர்மானம் விவரிக்கிறது. ஒளிமய கிராம திட்டத்தின் கீழ், வேளாண் பணிக்கான தனி மின்சார விநியோகத் திட்டம் தேசிய அளவில் பின்பற்றப்பட்டது மூலம் குஜராத்தின் அனுபவம் நாடு முழுவதும் விரிவுபடுத்தியது குறித்து தீர்மானத்தில் இடம்பெற்றது.

பிரதமர் திரு மோடியின் ஏழைகள் மீதான இரக்கம் கண்ணியமாக மாறுகிறது குறித்து  கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. சுமார் 60 கோடி மக்கள் வங்கி கணக்குகள், 4 கோடிக்கும் அதிகமான வீடுகள், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறியது ஆகியவை பிரமரின் தனிப்பட்ட புரிதல் எப்படி பொதுச்சேவையாக மாறி மக்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து தீர்மானத்தில் விளக்கப்பட்டது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319565&reg=3&lang=1

***

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319765) வருகையாளர் எண்ணிக்கை : 37