சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியத் தலைநகரைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில், எரிபொருள் பயன்பாடு, விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 5:22PM by PIB Chennai

தேசிய தலைநகரைச் சுற்றியுள்ளப் பகுதிகளில், எரிபொருள் பயன்பாடு, விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க ஏதுவாக, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில், கேமராக்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துமாறு காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக குளிர்காலங்களில் அப்பகுதிகளில், காற்றின் தரத்தின் மீது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை காரணமாக ஏற்படும் மோசமான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளின் கண்காணிப்பு, விதிமுறை சார்ந்த கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

அங்கீகரிக்கப்படாத எரிபொருட்களின் தொடர் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, கண்காணிப்பு, விதிமுறை இணக்கத்தை திறம்பட உறுதிசெய்யும் வகையில், தொழிற்சாலைகளில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டிய பகுதிகளை ஆணையம் விரிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319694&reg=3&lang=1

(Release ID: 2319694)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319812) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी