இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர் சக்திதான் வளர்ச்சியடைந்த இந்தியாவின் வலிமை: மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 3:53PM by PIB Chennai

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், 'எனது இளம் இந்தியா' (மை பாரத்) தளத்தின் வாயிலாக, தன்னார்வப் பணி, அனுபவப்பூர்வக் கற்றல், இளைஞர் மேம்பாட்டு முயற்சிகள், இதர தேசக் கட்டமைப்பு நடவடிக்கைகளில் இளைஞர்களின் தொடர்ச்சியான பங்கேற்பை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் 'புள்ளிகள், வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம்' (பிஆர்ஆர்) முறையைச் செயல்படுத்தி வருகிறது.

தேசத்தைச் கட்டமைக்கும் பணியில் இளைஞர்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, "இளைஞர் சக்திதான் வளர்ச்சியடைந்த இந்தியாவின் வலிமை. 'மை பாரத்' தளத்தின் பிஆர்ஆர் செயல்முறை மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இளைஞர்களின் பங்கேற்பை அங்கீகாரம், வாய்ப்பு மற்றும் தலைமைத்துவமாக மாற்றி வருகிறது," என்று கூறினார்.

பிஆர்ஆர் செயல்முறை, முறையான அங்கீகாரம்,  டிஜிட்டல் தளங்களில் வாய்ப்பு ஆகியவற்றில் தொடங்கி, உறுதியான வெகுமதிகள், தேசிய அளவிலான இளைஞர் தலைமைத்துவத் தளங்களில் பங்கேற்கும் வாய்ப்புகள் வரை நீளும் ஒரு படிப்படியான பாதையை வகுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319567&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319817) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Urdu , English , Gujarati , Malayalam