தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஒடிசா மாநிலம் பாலாசோர் நகரில் செல்போன் நெட்வொர்க் தரம் குறித்து ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 11:57AM by PIB Chennai
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது செல்போன் சேவையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஜனுகன்ச், மாலிகாஷ்பூர், ரெமுனா உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் நெட்வொர்க்கின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு மருத்துவமனைகள், பிரசித்திபெற்ற கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செல்போன்களுக்கான சிக்னல் சரியாக கிடைக்கிறதா, குரல் தெளிவாக கேட்கிறதா, அலைவரிசை துண்டிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 2ஜி முதல் 5ஜி வரை பயன்படுத்துவோரின் அலைக்கற்றைகளும் பரிசோதிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் தெரியவந்த குறைபாடுகளைத் தொடர்புடைய செல்போன் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்த தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், இதன்மூலம் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சேவை மேம்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319941®=3&lang=1
***
SS/LN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2320284)
வருகையாளர் எண்ணிக்கை : 16