ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஜவுளித்துறை சார்பில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 12:41PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை சார்பில், 2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு, செயல்முறை ஆகியவை முன்னெடுக்கப்பட்டன. பணியிடங்கள், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்ததுடன், பல்வேறு இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை செயலாளர் நீலம் ஷமி ராவ் பங்கேற்று மரக்கன்று நட்டுவைத்து ஊக்கப்படுத்தினார். தூய்மைப் பணியில் மத்திய ஜவுளித்துறை ஊழியர்கள், நெசவாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியின் மூலம் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக ஜவுளித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319980&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320329) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी