பிரதமர் அலுவலகம்
அரசுத் தலைவராக 25 ஆண்டுகள் சேவையாற்றியதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நைஜீரிய அதிபர் திரு போலா அகமது டினுபுவிற்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 8:36PM by PIB Chennai
நைஜீரிய அதிபர் திரு போலா அகமது டினுபு அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவும் நைஜீரியாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், வளரும் நாடுகளின் முன்னணி குரல்களாகத் திகழ்கின்றன என்றும் மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்திய- நைஜீரிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய, வளமான, அமைதியான உலகத்திற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லவும் தான் உறுதியாக இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“இந்தியாவும் நைஜீரியாவும் நெருங்கிய கூட்டாளிகளாகவும், வளரும் நாடுகளின் முன்னணி குரல்களாகவும் திகழ்கின்றன. நமது உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதையும், அனைவரையும் உள்ளடக்கிய, வளமான, அமைதியான உலகத்திற்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதையும், நமது ஒத்துழைப்பைத் தொடர்வதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
@NGRPresident”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320385®=3&lang=1
***
TV/BR/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2320868)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam