பிரதமர் அலுவலகம்
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த செர்பிய அதிபர் திரு அலெக்சாண்டர் உசிச்-க்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 9:10PM by PIB Chennai
செர்பிய அதிபர் திரு அலெக்சாண்டர் உசிச் வெளியிட்ட வாழ்த்துச் செய்திக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய-செர்பிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் அந்நாட்டு அதிபரின் தனிப்பட்ட பங்களிப்பைத் தாம் பெரிதும் மதிப்பதாகத் திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“உங்களது அன்பான வாழ்த்துகளுக்கும் நட்புறவிற்கும் நன்றி.
இந்திய-செர்பிய உறவை வலுப்படுத்துவதில் உங்களது தனிப்பட்ட பங்களிப்பை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
உங்கள் தலைமையின் கீழ், செர்பியா ஒரு வியக்கத்தக்க மாற்றத்தைச் சந்தித்துள்ளது. மிகுந்த உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செர்பியாவிற்கு நீங்கள் சேவையாற்றியுள்ளீர்கள்.
இந்திய-செர்பிய உறவை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல நான் ஆவலுடன் இருக்கிறேன்.
@avucic”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320429®=3&lang=1
***
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320949)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam