பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் பிரதமர் திருமிகு சனே தகாய்ச்சி-க்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 9:16PM by PIB Chennai

ஜப்பான்  பிரதமர் திருமிகு சனே தகாய்ச்சி வெளியிட்ட அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி,  கடந்த  ஜூலை மாதத்தில் அவர் மேற்கொண்ட இந்தியப் பயணத்தையும் நினைவு கூர்ந்தார். இந்தப் பயணம், இந்திய-ஜப்பான் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக திரு மோடி குறிப்பிட்டார். நீண்டகால நட்புறவின் அடிப்படையில், உலக அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றிற்காக இந்தியாவும் ஜப்பானும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு, இருதரப்பு உறவுகளைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

***

(Release ID 2320435) 

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321071) வருகையாளர் எண்ணிக்கை : 12