சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் 5-வது பட்டமளிப்பு விழா - 125 இளம் மருத்துவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார் தமிழ்நாடு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2026 6:44PM by PIB Chennai

சென்னை கே கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 5-வது பட்டமளிப்பு விழா இன்று (10.10.2026) அந்த நிறுவனத்தின் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 2020–21-ம் கல்வியாண்டைச் சேர்ந்த 125 எம்பிபிஎஸ் பட்டதாரிகளுக்குச் சான்றிதழ்களையும் பதக்கங்களையிம் வழங்கினார்

 

இவ்விழாவின்போது, ​​'வித்யா தானம்' திட்டத்தின் கீழ் 'புக் பிரிட்ஜ்' எனும்   முன்முயற்சியை ஆளுநர் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, காப்பீடு செய்யப்பட்ட ஒருவரின் மகளின் உயர்கல்வி லட்சியங்களுக்கு உதவும் வகையில் நீட் தேர்வுக்கான புத்தகங்களை ஆளுநர் வழங்கினார். மேலும், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டமான இஎஸ்ஐ-ன் கீழ் மருத்துவப் பயிற்சியையும் சுகாதாரச் சேவைகளையும் வலுப்படுத்தும் நோக்கில், தீக்காய சிகிச்சை பிரிவு, தீவிர கண்காணிப்புப் பிரிவு, இரைப்பை குடல் மருத்துவப் பிரிவு, அறுவை சிகிச்சை திறன் ஆய்வகம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளையும் ஆளுநர் திறந்து வைத்தார்.

பட்டதாரிகளிடையே உரையாற்றிய ஆளுநர், இளம் மருத்துவர்கள் தங்கள் நிபுணத்துவத்தைச் சமூக நலனுக்காக, குறிப்பாக தொலைதூர, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாத மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் சமச்சீர் கண்ணோட்டத்துடன் மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மனிதநேயத்துடன் மருத்துவத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று மருத்துவர்களை ஊக்குவித்தார்.

 

இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஸ்வப்னதாய் ஏ மெஷ்ராம், பட்டதாரி மாணவர்களுக்கு ஹிப்போகிராட்டிக் உறுதிமொழியை வாசித்து உறுதியேற்கச் செய்து, அவர்கள் மருத்துவத் தொழிலில் முறைப்படி இணைவதை உறுதி செய்தார்.

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321790) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English