பிரதமர் அலுவலகம்
ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 OCT 2026 9:49AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அவரது செயல்பாடுகள், தலைமுறைகளைக் கடந்து, பொது வாழ்க்கை என்பது தேசிய மறுமலர்ச்சிக்கான ஒரு கருவியாக அமையும் என மக்களுக்கு உத்வேகம் அளித்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரநிலை காலத்தின்போது லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் அச்சமற்ற குரலையும், நல்லாட்சி, சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினரைச் சென்றடைவதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் செயல்படும் அதே வேளையில், ஜெயபிரகாஷ் நாராயணின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் தேசம் உறுதியாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறோம். அவரது செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்தது. பொது வாழ்க்கை என்பது தேசப் புத்துணர்ச்சிக்கான ஒரு கருவியாக அமையும் என்று அவர் மக்களுக்கு உத்வேகம் அளித்தார். அவசர நிலைக் காலத்தின்போது அவரது அச்சமற்ற குரல் குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சியை உறுதி செய்வதிலும், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களைச் சென்றடைவதிலும் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க நாங்கள் பாடுபடும் இவ்வேளையில், அவரது லட்சியங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.”
****
(Release ID: 2321856)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2321921)
வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam