நிதி அமைச்சகம்
ரயில் பயணியிடமிருந்து போதைப் பொருள் பறிமுதல்: வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
11 OCT 2026 10:25AM by PIB Chennai
2026 அக்டோபர் 07, 09 தேதிகளில், உளவுத்துறை வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையில், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் மங்களூர் மண்டல அதிகாரிகள், தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு ரயிலில் பயணம் செய்த ஒரு பயணியிடம் சோதனை நடத்தினர். பயணியின் உடைமைகளை முழுமையாகச் சோதனையிட்டதில், மெத்தம்பெட்டமைன் (கிரிஸ்டல் மெத்) எனச் சந்தேகிக்கப்படும் 5.753 கிலோ எடையுள்ள வெள்ளை நிறப் படிகப் பொருள் அடங்கிய மூன்று பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேகத்திற்குரிய போதைப்பொருள், 1985-ம் ஆண்டு போதைப் பொருட்கள் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321861®=48&lang=1
***
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322166)
வருகையாளர் எண்ணிக்கை : 6