நிதி அமைச்சகம்
பங்களாதேஷில் இருந்து கடத்தப்பட்ட 7.8 கிலோ தங்கம் பறிமுதல்: வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
11 OCT 2026 10:26AM by PIB Chennai
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), பங்களாதேஷில் இருந்து நடைபெறும் எல்லை தாண்டிய தங்கக் கடத்தலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கிழக்குப் பிராந்தியத்தில் 2026 அக்டோபர் 08, 09 தேதிகளில் நடத்தப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில், ரூ. 11.50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள, வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 7.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
டான்குனி சுங்கச்சாவடியில், டி.ஆர்.ஐ அதிகாரிகள் ஒரு நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அதில், சுமார் 6.8 கிலோ எடை கொண்ட ரூ. 10 கோடி மதிப்புள்ள 50 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே நாளில், மேற்கு வங்க மாநிலத்தில், மால்டா டவுன் ரயில் நிலையம், நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் ரயில்களில் இருந்து இறங்கிய பயணிகளை டிஆர்ஐ குழுக்கள் சோதனையிட்டபோது சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, சுமார் 1 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் கடத்தல் கட்டமைப்புகளைத் தகர்ப்பதில் டிஆர்ஐ உறுதியாக உள்ளது.
மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321864®=48&lang=1
***
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322168)
வருகையாளர் எண்ணிக்கை : 8