வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மிசோரம் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2026 8:08PM by PIB Chennai

மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு மாநில மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியா, அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மிசோரம் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சராக அவர் மிசோரத்திற்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி, இளைஞர் அதிகாரம் மற்றும் அப்பகுதியின் பல்வேறு தரப்பினருடனான தொடர்பை வலுப்படுத்துவதில் மத்திய அரசு கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை அவரது இரண்டு நாள் பயணம் பிரதிபலிக்கிறது.

தனது பயணத்தின் போது, வளர்ச்சி தொடர்பான திட்டங்களில் பங்கேற்கும் அமைச்சர் திரு. சிந்தியா, மாணவர்கள், பொது மக்கள் மற்றும் வடகிழக்கு வங்கியாளர்கள் மாநாடு 3.0 நிகழ்வில் வங்கித் துறையைச் சேர்ந்தவர்களுடனும் கலந்துரையாடவுள்ளார்.

அக்டோபர் 12 அன்று ஐசால் வந்தடையும் திரு. சிந்தியா, அங்கிருந்து துய்வாமித் பகுதிக்குச் சென்று, மிசோரமின் வளர்ச்சி முன்முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டவுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322028&reg=48&lang=2

***

TV/VK/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2322179) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese