புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'அபார்க்' இளம் ஆய்வாளர்களுக்கான பயிற்சி முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2026 5:58PM by PIB Chennai

பூனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், இளம் ஆய்வாளர்களுக்கான பயிற்சி முகாமை  இன்று நடத்தியது. உருவெடுத்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மாநாட்டின் தொடக்க அறிமுக விழாவாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

இவ்விழாவில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கௌரவச் செயலாளர் டாக்டர் டி. சீனிவாச குமார் முதன்மை உரையாற்றினார். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு எவ்வளவு முக்கியம் என்பதையும், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கான வலுவான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாட்டின் நீடித்த வளர்ச்சிக்குப் பயன்படுத்துமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321986&reg=48&lang=2  

***

TV/VK/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2322182) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi