வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் ஏற்றுமதி நடப்பாண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை எட்டும் – மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 2:34PM by PIB Chennai
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் புதுதில்லியில் நடைபெற்ற 31-வது இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) கூட்டாண்மை உச்சிமாநாட்டின் முன்னோட்ட நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலக நாடுகள் சுவர்களை எழுப்பிக் கொண்டிருக்கும் போது இந்தியா பாலங்களைக் கட்டத் தொடங்கிவிட்டதாக கூறினார். இந்தியா கடந்த ஆண்டு சாதனை அளவாக 863 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்ததாகவும் நடப்பாண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சர்வதேச வர்த்தகம் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது ஆண்டிற்கு சுமார் 16 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தியா ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி இலக்கை அடையும் என்று நம்பிக்கைத் தெரிவித்த திரு கோயல், இந்த இலக்கு அரசால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் மக்களாலும், 63 மில்லியன் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், பெரிய மற்றும் சிறிய தொழில்துறை நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள், சுமார் 2,50,000 புத்தொழில் நிறுவனங்கள் உள்பட இந்திய வணிகங்களாலும் நிர்ணயிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்த கூட்டாண்மை உச்சிமாநாடு நவம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320694®=3&lang=1
***
TV/IR/SM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322233)
வருகையாளர் எண்ணிக்கை : 10