பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் இந்தியாவின் திறன்கள் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 6:41PM by PIB Chennai

உலக அளவிலான விண்வெளிப் புலனாய்வுத் தகவல், பாதுகாப்பு நிறுவனமான திகந்தராவின் நிறுவனர்கள் திரு அனிருத் சர்மா, திரு தன்வீர் அகமது ஆகியோர் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

முன்பு பிற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்த துறைகளில், இந்தியா விரைவாகத் தன்னிறைவு அடையும் வகையில் முன்னேற்றம் கண்டு வருவதுடன், திறன்களை மேம்படுத்திக் கொன்டு வருவது குறித்து இந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது. விண்வெளித் துறையில், இந்தியா தனது திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது குறித்தும், உலக அரங்கில், நிலைநிறுத்திக் கொள்வது குறித்தும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320914&reg=3&lang=1   

***

TV/SV/GS  


(வெளியீட்டு அடையாள எண்: 2322234) வருகையாளர் எண்ணிக்கை : 10