தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நூறு கோடி மொபைல் இணைப்பு வழங்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 6:58PM by PIB Chennai

இந்திய மொபைல் காங்கிரஸ்  2026 நிகழ்வில், மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில் அமைச்சர்கள் அளவிலான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 'எல்லையற்ற வளர்ச்சி: அடுத்த நூறு கோடி டிஜிட்டல் இணைப்புகளில் முதலீடு' என்ற மையப்பொருளில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், "எல்லையற்ற வளர்ச்சி என்பது வெறும் தொலைத்தொடர்பு  கட்டமைப்புகளை விரிவாக்குவது மட்டுமல்ல; மனிதர்களுக்கான வாய்ப்புகளைப் பெருக்குவதாகும். புதிதாக இணையவுள்ள 100 கோடி மக்கள், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுவார்கள். அடுத்தகட்ட 5ஜி, 6ஜி, செயற்கைக்கோள் நெட்வொர்க் மற்றும் செயற்கை நுண்ணறிவு  ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் அனைவருக்கும் டிஜிட்டல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் எஸ்டோனியா, ஜப்பான் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320926&reg=3&lang=1

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322246) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Odia , Malayalam