சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அஞ்சல் துறை சார்பில் சென்னையில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:23PM by PIB Chennai

அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் அக்டோபர் 16-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை-600002 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இதில், அஞ்சல் துறையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை தலைமை அஞ்சலக அதிகாரி நேரடியாக கேட்டறிகிறார். இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை அக்டோபர் 14-ம் தேதி அல்லது அதற்கு முன்னரே அனுப்ப வேண்டும்.

புகார் அனுப்புவர்கள் அஞ்சல் வழியாக அல்லது annaroadho@indiapost.gov.in அஞ்சல் என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். தனியார் கூரியர்கள் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.    

அஞ்சல் மற்றும் விரைவு அஞ்சல் தொடர்பான புகார்களுக்கு அஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழுமையான முகவரி, பதிவு ரசீது எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் விவரங்கள் ஆகியவற்றை முழுமையாகக் குறிப்பிட வேண்டும்.

புகாரானது சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு அல்லது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடர்புடையதாக இருப்பின் கணக்கு எண் / காப்பீட்டு எண், காப்பீட்டுதாரரின் பெயர் மற்றும் முழுமையான முகவரி சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் பெயர் மற்றும் அஞ்சல் துறையுடன் தொடர்பான ஏதேனும் ஆவண விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

.***

TV/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322420) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English