சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
2026–27-ம் ஆண்டிற்கான பொது கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்களுக்கான பயிலரங்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 8:18PM by PIB Chennai
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, 2026–27-ம் ஆண்டிற்கான சட்டமன்ற நிலைக்குழுக்களை 08 செப்டம்பர் 2026 அன்று அமைத்தது. இந்திய தலைமை கணக்காளர் (CAG) அவர்களால் தயாரிக்கப்படும் தமிழ்நாடு அரசு தொடர்பான தணிக்கை அறிக்கைகள், பொது கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு ஆகிய இரு சட்டமன்றக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. 2026–27ஆம் ஆண்டிற்கான பொது கணக்குக் குழுவின் தலைவராக திரு. SSB. சையது பாரூக் பாஷா, பொது நிறுவனங்கள் குழுவின் மாண்புமிகு தலைவராக திரு. அ. கல்லாணை நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினர்களுக்கு, இக்குழுக்களின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், உன்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் பயிலரங்கு நடைபெற்றது.

தமிழ்நாடு முதன்மை தணிக்கை அலுவலர் (தணிக்கை -1) ஃபிரெடெரிக் சியெம்லே, தமிழ்நாடு முதன்மை தணிக்கை அலுவலர் (தணிக்கை -2) திரு. இரா. திருப்பதி வெங்கடசாமி ஆகியோர் நோக்கவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் தொடக்கவுரையாற்றினார். பொது கணக்குக் குழுவின் தலைவர் திரு. SSB. சையது பாரூக் பாஷா, பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் திரு. அ. கல்லாணை மற்றும் தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளர் திருமதி இரா. சாந்தி ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். மதிப்பீட்டு குழுவின் தலைவர் திரு ம. அருள் பிரகாசம் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்திய கணக்காய்வுத் தலைவர், பொது கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு ஆகியவற்றின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள், அத்துடன் குழுக் கூட்ட விவாதங்களின்போது முதன்மைக் கணக்காய்வுத் தலைவர்களின் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவாக, முதுநிலை துணை தணிக்கை அலுவலர் திரு. இரா. கௌதமன் நன்றியுரை வழங்கினார்.
***
TV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322515)
வருகையாளர் எண்ணிக்கை : 13