தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
உலகளாவிய 6ஜி காப்புரிமைகள் மற்றும் தரநிலைகளில் 10 சதவீதத்தை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது: மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 8:01PM by PIB Chennai
மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, இந்திய தொலைத்தொடர்புத் துறையின் சாதனைகள் மற்றும் எதிர்கால இலக்குகளை பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 5.6 லட்சம் அடிப்படை அலைவரிசை கட்டமைப்புகள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் 5ஜி சேவை தடையின்றி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. 'தொலைத்தொடர்புச் சட்டம் 2023'-ன் புதிய விதிகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 'பாரத்நெட்' திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 6ஜி மற்றும் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக ரூ. 500 கோடி மதிப்பில் 136 திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய 6ஜி காப்புரிமைகளில் குறைந்தபட்சம் 10 சதவீத பங்கைப் பெறுவதை இந்தியா முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு பதிலாக உள்நாட்டுத் தயாரிப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320979®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322531)
வருகையாளர் எண்ணிக்கை : 9