ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற பயிற்சி மையங்களின் தேசிய அளவிலான ஆய்வுக்கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 7:33PM by PIB Chennai

மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின்  தேசிய அளவிலான இருநாள் ஆய்வுக்கூட்டம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிராமப்புற மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு. ரோஹித் கன்சால் பேசுகையில், 2009-ஆம் ஆண்டு முதல் இதுவரை 647 மையங்கள் மூலம் சுமார் 64 லட்சம் பேருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 72 சதவீதத்தினர் சுயவேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் 46 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.

வங்கிக் கடன் இணைப்பை மேம்படுத்துதல், பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல், பயிற்சியாளர்களின் தரத்தை உயர்த்துதல், மாதிரி மையங்களை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகிய 5 முக்கிய முன்னுரிமைகளை அவர் வலியுறுத்தினார். மேலும், சர்வதேச வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பப் பயிற்சிகளைப் புதுப்பிக்கவும், ஊரக திறன் மேம்பாடு தொடர்பான இணையதளத்துடன் இச்சேவைகளை இணைக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320955&reg=3&lang=1

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322574) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी