தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப் மாநிலத்தில், ஃபசில்கா பகுதியில் மொபைல் சேவைகளின் தரம் குறித்த மதிப்பீடு

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 12:52PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), ஆகஸ்ட் 2026 மாதத்தில், பஞ்சாப் மாநிலத்தில் ஃபசில்கா மற்றும் அதனைச்  சுற்றியுள்ள பகுதிகளில், (உள்ளூர் சேவைப் பகுதி) மேற்கொள்ளப்பட்ட  தரநிலை குறித்த சோதனை முடிவுகளை, தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் தகவலுக்காக வெளியிட்டுள்ளது.

இந்த நேரடிச் சோதனையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்படும் மொபைல் சேவைகளின் (குரல், தரவு ஆகிய இரண்டும்) நிகழ்நேரத் தர நிலையை மதிப்பீடு செய்து சரிபார்ப்பதாகும். இந்த நேரடிச் சோதனையின் போது, டிராய் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறனை, அதன் செயல்பாடு, அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம், செயல்திறன் போன்ற முக்கிய சேவைத் தரநிலை சார்ந்த அளவுருக்களில் பதிவு செய்கிறது.

பின்னர் இந்த முடிவுகள், வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளின் தரத்தை  மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320599&reg=3&lang=1    

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322576) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi