பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு அமைச்சகத்தின் சோதனைத் தளங்கள், துப்பாக்கி சுடும் பயிற்சிக் களங்கள், பரிசோதனை வசதிகளைப் பயன்படுத்துவதற்கான திருத்தியமைக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 4:58PM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில், தற்சார்பு நிலையை ஊக்குவிக்கும் வகையில்,  பாதுகாப்பு அமைச்சகத்தின் பிற மேம்பாட்டுத் திட்டங்களுக்கான  சோதனை / பரிசோதனைக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புத் துறையினர் பயன்படுத்துவதற்காக, டிஆர்டிஓ, அரசுத் தரநிலை  உத்தரவாத முகமைகள், முப்படைகளிடம் உள்ள சோதனைத் தளங்கள், துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் தளங்கள், ஆய்வகப் பரிசோதனை வசதிகள் ஆகியவற்றின் பட்டியலை இந்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் வழங்குகிறது.

பொருந்தக்கூடிய இடங்களில் சோதனை / பரிசோதனைக்கான கட்டணங்களைக் கணக்கிடுவதற்கும், செலுத்துவதற்கும் தேவையான  நடைமுறை இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்துறைக்கான ஆவணப்படுத்தல், செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் பாதுகாப்புத் துறை எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு  விரைவாகத் தீர்வு காண்பதன் மூலம் 'வணிகம் செய்வதை எளிதாக்குவதை' ஊக்குவிக்கும் வகையில், ஏற்கனவே இருந்த நிலையான செயல்பாட்டு நெறிமுறையில் உள்ள நடுவர் மன்றத் தீர்வு முறைக்கு மாற்றாக, எளிமையான, தொழில்துறைக்கு உகந்த இணக்க ஒப்பந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் சோதனை, பரிசோதனை நடவடிக்கைகளுடன், உள்நாட்டுமயமாக்கல், புத்தாக்கம், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசின் பல்வேறு முன்முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320195&reg=3&lang=1   

****

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322579) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese