சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

உலக தரநிலைகள் தினத்தையொட்டி சிறப்பு தொழில்நுட்ப கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 10:33PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தர நிர்ணய அமைவனத்தின் தென் மண்டல ஆய்வகம், உலக தரநிலைகள் தினம் 2026-ஐ முன்னிட்டு, “வலுவான சோதனைக் கட்டமைப்பை உருவாக்குதல் – குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் ஆய்வகங்கள்” என்ற தலைப்பில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கை நடத்தியது.

சென்னை, ஆலந்தூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிஐஎஸ் அதிகாரிகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு அலுவலகம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். தொழில் நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துதல், இந்திய தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளைச் பரிசோதித்தல் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குச் பரிசோதனை வசதிகளை எளிதில் கிடைக்கச் செய்தல் ஆகியவை குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

பிஐஎஸ் தென் மண்டல ஆய்வகத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் சூர்யகல்யாணி வரவேற்புரையாற்றினார். இந்திய தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறனை உறுதிப்படுத்துவதில் ஆய்வகச் சோதனைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், ஆய்வகங்கள், தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், பரிசோதனை வசதிகள், தொழில்நுட்ப ஆதரவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தகைய கருத்தரங்குகளின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டார்.

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான, முதுநிலை இயக்குநர் திரு எஸ் டி தயானந்த் உலக தரநிலைகள் தினச் செய்தியை வாசித்தார். தயாரிப்புகளின் தரம், பாதுகாப்பு, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தரநிலைகள் ஆற்றும் பங்கையும், வலுவான தரக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆய்வகங்கள், தொழில் நிறுவனங்கள், தொடர்புடைய அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

***

SS/IR/PS/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2322805) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English