சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேனியில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 4:57PM by PIB Chennai

தேனியில் புதிய ஆதார் சேவை மையத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இன்று தொடங்கியது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு வி சிவகிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
அப்போது அம்மையத்தின் உள்கட்டமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அங்கு வருகை தந்தவர்களுடன் உரையாடினார். மேலும், அந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆதார் பதிவு, புதுப்பித்தல் ஆகிய நடைமுறைகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்தப் புதிய மையம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 20 ஆதார் சேவை மையங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இயக்கி வருகிறது. விரைவில் 10 மையங்களை அது திறக்க உள்ளது.
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2322925)
வருகையாளர் எண்ணிக்கை : 12