சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கன்னியாகுமரியில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 6:38PM by PIB Chennai

கன்னியாகுமரியில் புதிய ஆதார் சேவை மையத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இன்று தொடங்கியது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு எம் பிரதாப் தொடங்கி வைத்தார்.

அப்போது அந்த மையத்தின் உள்கட்டமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அங்கு வருகை தந்தவர்களுடன் அவர் உரையாடினார். அந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் பதிவுகள், புதுப்பித்தல் நடைமுறைகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆதார் சேவை மையத்தில் புதிய பதிவுகள், விவரங்களை பதிவு செய்தல், பயோமெட்ரிக் புதுப்பித்தல், குறைதீர்ப்பு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் புதிய மையம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 21 ஆதார் சேவை மையங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இயக்கி வருகிறது. விரைவில் 9 மையங்களை அது திறக்க உள்ளது.

***

SS/IR/PS/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2322952) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English