விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தின் ஓராண்டு நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:11PM by PIB Chennai

பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, புதுதில்லியில் தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் உள்ள பாரத ரத்னா சி சுப்பிரமணியம் அரங்கில் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை 2026 அக்டோபர் 11 அன்று ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் செயலாளர்கள், பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள், மத்திய அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்ட 370-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், இத்திட்டத்தின் முதல் ஆண்டில் வலுவான அடித்தளங்களை அமைப்பது குறித்து கவனம் செலுத்தியதாக கூறினார்.

வேளாண் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், நீர்ப்பாசனம், நீர் மேலாண்மையை வலுப்படுத்துதல், வேளாண் கடன்களை எளிதாகப் பெற வழி செய்தல், அதிக மதிப்புடைய வேளாண்மையை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், விவசாயிகளின் வருவாயை உயர்த்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322267&reg=48&lang=1

***

SS/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323182) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Telugu , Kannada