பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிக உயரமுடைய முகுத் மலையேற்றப் பயணத்தை நிறைவுசெய்த இந்திய கடலோர காவல்படையினருக்கு பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 5:00PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 2026 அக்டோபர் 12 அன்று நடைபெற்ற விழாவில், இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த 17 பேரை அம்மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி வரவேற்றார். டார்ஜிலிங்கில் உள்ள இமயமலை மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் நிபுணத்துவ வழிகாட்டுதலின் கீழ் இக்குழுவினர் 7,045 அடி உயரமுடைய முகுத் மலை சிகரத்தை 2026 அக்டோபர் 7 அன்று வெற்றிகரமாக அடைந்தனர்.

இது 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எவரெஸ்ட் சிகரப் பயணத்திற்கான இக்குழுவின் முன்கட்ட தயாரிப்புகளுக்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமையும்.

அணியின் அபாரமான மன உறுதியையும் சகிப்புத்தன்மையையும் பாராட்டியதோடு, துணிச்சலுக்கும் நாட்டின் பெருமைக்கும் இந்தச் சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் திரு புஷ்கர் தாமி கூறினார். இந்தியக் கடலோரக் காவல்படையின் கூடுதல் தலைமை இயக்குநர் ஆனந்த் பிரகாஷ் படோலாவும், சவாலான இமயமலைப் பகுதியில் பயணித்த குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322315&reg=3&lang=1

***

TV/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323195) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese