அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா – இங்கிலாந்து அறிவியல் மற்றும் புத்தாக்கக் குழுவின் 8-வது கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 4:48PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் இங்கிலாந்து வர்த்தகத் துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் தலைமையில் 8-வது இந்தியா–இங்கிலாந்து அறிவியல் மற்றும் புத்தாக்கக் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான ஆராய்ச்சி கூட்டாண்மை, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், செமி கண்டக்டர், உயிரி தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அறிவியல் ஆராய்ச்சிகளைப் நடைமுறைப் பயன்பாடுகளாக மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியா ஜீனோமிக்ஸ் சிறப்பு மையத்தை இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். இரு நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முனைவோரை இணைக்கும் வகையில் இந்தியா–இங்கிலாந்து தொலைநோக்கு பார்வை 2035 மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு முன்னெடுப்புகள் மூலம் பல்வேறு கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322306®=48&lang=1
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323197)
வருகையாளர் எண்ணிக்கை : 4