தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி, மத்திய தில்லி பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரநிலையை ட்ராய் மதிப்பீடு

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 3:48PM by PIB Chennai

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவைகளின் தரநிலை குறித்து அறிந்துகொள்ளும் வகையில், ஆகஸ்ட் மாதத்தில் தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமம் பெற்றுள்ள புதுதில்லி, மத்திய தில்லி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மொபைல்  சேவைகளின் (குரல், தரவு) தரநிலையை நேரடியாக மதிப்பிடுவதும், சரிபார்ப்பதும் இந்த சோதனையின் நோக்கமாகும். இந்தச் சோதனை நடவடிக்கையின்போது, அழைப்பு துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகியவற்றின் வேகம் போன்ற முக்கிய சேவைகளுக்கான தரநிலை அளவீடுகள் அடிப்படையில் சேவை வழங்கும் நிறுவனங்களின் செயல்திறனை ட்ராய் பதிவு செய்கிறது. பின்னர், வடிக்கையாளர்களுக்குத் தகவல்களை வழங்கவும், சேவை வழங்குநர்கள் தங்களது  சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் இந்த முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

நகரங்கள், முக்கியப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில் அனைத்து சேவை வழங்குநர்களின் மொபைல் சேவைகளின் செயல்திறனை நேரடியாகப் பதிவு செய்யும் வகையில் இந்த பரிசோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322242&reg=48&lang=1    

***

SK/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2323239) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी