அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா - இங்கிலாந்து இருதரப்பு பேச்சுவார்த்தை: விண்வெளி, அணுசக்தித் துறைகளில் ஒத்துழைப்பு விரிவாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 4:45PM by PIB Chennai
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் இங்கிலாந்து வர்த்தகத் துறை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விண்வெளி, சிவில் அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியாவின் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் காரணமாக இரு நாடுகளின் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. சிவில் அணுசக்தித் துறையில் 'சாந்தி' சட்டம் 2025-ஐ சுட்டிக்காட்டிய அமைச்சர், சிறிய ரக அணு உலைகள் மற்றும் அணுசார் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சியிலும் இணைந்து செயல்பட இந்த சந்திப்பின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322301®=48&lang=1
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323247)
வருகையாளர் எண்ணிக்கை : 9