புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2026 செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்க அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 4:00PM by PIB Chennai
2026 செப்டம்பர் மாத நிலவரப்படி, நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் அடிப்படையிலான சில்லறை பணவீக்க விகிதம் 5.54 ஆக உள்ளது.
2024-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, 2025 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026 செப்டம்பர் மாதத்தில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் அடிப்படை ஆண்டு வாரியான பணவீக்க விகிதம் 5.54 சதவீதமாக உள்ளது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் முறையே பணவீக்க விகிதம் 6.08 சதவீதம் 4.88 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
2025 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026 செப்டம்பர் மாதத்தில் அகில இந்திய நுகர்வோர் உணவு விலை குறியீட்டின் அடிப்படையிலான ஆண்டு வாரியான உணவுப் பணவீக்க விகிதம் 7.74 சதவீதமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322244®=48&lang=1
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323252)
வருகையாளர் எண்ணிக்கை : 7