பாதுகாப்பு அமைச்சகம்
கடல்சார் ஒத்துழைப்பில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், கடல்சார் பயிற்சியில் இந்தியக் கடற்படை போர்க்கப்பல் தர்காஷ் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 5:51PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் ஏவுகணைத் திறன் கொண்ட போர்க்கப்பலான தர்காஷ், இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா கூட்டுக் கடல்சார் பயிற்சியில் பங்கேற்பதற்காக, தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது.
இந்த முத்தரப்புக் கடல்சார் பயிற்சி, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், போரில் பங்கேற்கும் படைகளுக்கு இடையே, பரஸ்பர புரிதலை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்திய, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கக் கடற்படைகள் ஒன்றிணைந்து பங்கேற்கிறது.
இந்த கடற்படைப் பயிற்சி, இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா கட்டமைப்பின் கீழ், 2008 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையே, கூட்டுப் பயிற்சி அளிப்பதற்கும், சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது. இந்தப் பயிற்சி, தரைப்படை, விமானப்படை, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடற்படை வான்வழி நடவடிக்கைகள், கடல்வழித் தடுப்பு, கப்பலில் சென்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்பு, சேதக் கட்டுப்பாடு, தீயணைப்பு போன்ற செயல்பாடுகளுக்கான பயிற்சியுடன், தொழில்முறை சார்ந்த கலந்துரையாடல் உள்ளிட்ட விரிவான கடல்சார் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322377®=3&lang=1
***
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323259)
வருகையாளர் எண்ணிக்கை : 9