சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 4:56PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள், கழிப்பறைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாகவும் முறையாகவும் பராமரிப்பதை உறுதி செய்ய, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முகமைகள் நிர்ணயிக்கப்பட்ட பராமரிப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும். நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் வாரம் ஒருமுறை ஆய்வு மேற்கொள்வர். குறைகள் கண்டறியப்பட்டால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்ய உத்தரவிடப்படும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட குறைகளைச் சரிசெய்யத் தவறினால், அந்த முகமை 'செயல்திறனற்றது' என அறிவிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் டெண்டர்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322314®=3&lang=1
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323272)
வருகையாளர் எண்ணிக்கை : 5