விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் தன தானிய வேளாண் திட்ட தேசிய மாநாடு: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 7:05PM by PIB Chennai
புதுதில்லி பூசா வளாகத்தில் நடைபெற்ற 'பிரதமரின் தன தானிய வேளாண் திட்ட தேசிய மாநாட்டில், சிறப்பாகச் செயல்பட்ட மாவட்டங்களை மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "மக்களின் தேவைக்கேற்பக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதே பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த ஆட்சியின் அடையாளம்" என்றார். புதுதில்லி அலுவலகங்களில் திட்டங்களை வகுக்காமல், மாவட்ட ஆட்சியர்கள் கள நிலவரத்திற்கு ஏற்ப வேளாண் திட்டங்களை உருவாக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நீர்வளம், உணவுப் பதப்படுத்துதல், கூட்டுறவு, மீன்வளம் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்றும், அறிவியல் ஆராய்ச்சிகள் நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322443®=48&lang=2
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323298)
வருகையாளர் எண்ணிக்கை : 7