சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிஐஎஸ் கோயம்புத்தூர் அலுவலகத்தில் உலக தரநிலைகள் தினக் கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 5:40PM by PIB Chennai
_20261014181424_24f960.jpeg)
இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) கோயம்புத்தூர் கிளை அலுவலகம் சார்பில் இன்று (2026 அக்டோபர் 14) கோயம்புத்தூரில் உலகத் தர நிர்ணய தினம் 2026 கொண்டாடப்பட்டது. "நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு தரநிலைகள்: சிறந்த உலகிற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை" என்ற கருப்பொருளுடன், குறிப்பாக நிலையான வளர்ச்சி இலக்கு 7 - "குறைந்த விலையில், தூய்மையான எரிசக்தி" என்பதை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிஐஎஸ் கோயம்புத்தூர் கிளை அலுவலக இயக்குநர் திரு ரமேஷ் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (டிஎன்பிடிசிஎல்) கோயம்புத்தூர் தலைமைப் பொறியாளர் (பகிர்மானம்) திருமதி டி. சுமதி தலைமை உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கோயம்புத்தூர் இஸட்எஃப் விண்ட்பவர் நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் சர்வதேச தலைவர் திரு ஹர்ஷ் தகாம்கர், "தி எனர்ஜி ரெக்கனிங்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தெர்மாக்ஸ் குழுமத்தின் நிறுவனமான புனே ஃபர்ஸ்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பொது மேலாளர் திரு நரசிம்ம சாரி மும்மடி, "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்" என்ற தலைப்பிலான அமர்வில் உரையாற்றினார்.
இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தரக் குழுக்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பங்கேற்ற பரதநாட்டியம் மற்றும் தர நிர்ணயம் குறித்த விழிப்புணர்வு நாடகம் ஆகியவை இடம்பெற்றன.
***
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323451)
வருகையாளர் எண்ணிக்கை : 8