திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா திறன் 2026-27 போட்டியில் பங்கேற்பதற்குப் பதிவு செய்யும் கால அவகாசம் அக்டோபர் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 5:27PM by PIB Chennai

கல்வி நிறுவனங்கள், பங்கேற்பாளர்களின் கோரிக்கையை அடுத்து, இந்தியா திறன் 2026-27 போட்டியில் பங்கேற்பதற்குப் பதிவு செய்யும் கால அவகாசத்தை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் 2026 அக்டோபர் 19 வரை நீடித்துள்ளது.

புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் 2026 அக்டோபர் 9 அன்று ஷாங்காயில் நடைபெற்ற உலகத்திறன் போட்டியில் பங்கேற்ற குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். இது பங்கேற்பாளர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. இச்சந்திப்பு நாட்டின் திறமையான இளைஞர்களின் சாதனைகளைக் கொண்டாடியதுடன் தொழில்கல்வி சார்ந்த திறன்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. இச்சந்திப்பை அடுத்து, இந்தியா திறன் 2026-27 போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு செய்யும் காலத்தை மீண்டும் நீட்டிக்குமாறு கல்வி நிறுவனங்களும் ஆர்வமுடைய பங்கேற்பாளர்களும் அமைச்சகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதையடுத்து பதிவு செய்வதற்கு கால அவகாசம் 2026 அக்டோபர் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிக அளவிலான இளைஞர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தவும், தேசிய அளவில் போட்டியிடவும், உலகளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2322849&reg=48&lang=22

***

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323471) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam