வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களில் வங்கிச் சேவைகளை விரிவுபடுத்தி, கடன் வசதிகளை எளிதாக்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 2:30PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, வங்கிச் சேவைகளின் விரிவாக்கம், கடன் வசதிகள் கிடைப்பதை அதிகரித்தல், வங்கிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம் என மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாடு மற்றும் கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் வலியுறுத்தினார்.
ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 13, 2026 அன்று நடைபெற்ற வடகிழக்கு வங்கியாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். நிதிச் சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வடகிழக்கு பகுதிகள் முழுவதும் 131 புதிய வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 126 தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்கள் (ஏடிஎம்) நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட 9,479 கிராமங்களில், 6,905 கிராமங்கள் (அதாவது 73%) தற்போது வங்கிக் கிளை அல்லது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் டாக்டர் சுகந்தா மஜும்தார் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323179®=3&lang=1
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323501)
வருகையாளர் எண்ணிக்கை : 9