அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், இரண்டாம் நிலை நிதி மேலாளர்கள் அடங்கிய முதல் தொகுப்பை, ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க நிதியம் அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:37PM by PIB Chennai

மத்திய அரசின் முக்கிய முன்முயற்சிகளில் ஒன்றான ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க நிதியம், இதன் செயலாக்கத்திற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, 19 இரண்டாம் நிலை நிதி மேலாளர்களின் முதல் தொகுப்பை அறிவித்துள்ளது.

அக்டோபர் 8, 2026 அன்று நடைபெற்ற செயலாளர்களின் அதிகாரம் பெற்ற  குழுக் கூட்டத்தில், மொத்தம் ரூ. 7,131 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், 14 மாற்று முதலீட்டு நிதியங்கள்,  5 சிறப்பு  ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ரூ.1 லட்சம் கோடி மதிப்பில், ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கத் திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி, நவம்பர் 2025-ல் தொடங்கி வைத்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் நாடாக இருந்த இந்தியாவை, உலகளவில், போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பங்கள்,  தயாரிப்புகளை உருவாக்கும் நாடாகவும், உலகின் முன்னணி தொழில்நுட்ப வழங்குநராகவும் உருவெடுக்கச் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்தியாவின் ஆராய்ச்சி, புத்தாக்கச் சூழல் அமைப்பை  மாற்றியமைக்கும் வகையில், ஆக்கபூர்வமான முன்முயற்சிகளில் ஒன்றாக ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க நிதியம் திகழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322295&reg=48&lang=1

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323522) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी