அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சூரியனின் துருவ வளிமண்டலத்தில், துருவப் பிரகாசத்தை ஏற்படுத்தும், நுண்ணிய அலைகளின் காந்தப்புலச் செயல்பாடு குறித்த ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 4:07PM by PIB Chennai
சில குறிப்பிட்ட நுண்ணலை மற்றும் வானொலி அலைவரிசைகளில் வரைபடமாக்கப்படும்போது, சூரியனின் துருவங்கள் சூரிய சுயற்றுவட்டப்ப பாதையின் இதர பகுதிகளைக் காட்டிலும் மிகவும் பிரகாசமாக இருப்பது குறித்து, விண்வெளி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வு, சூரியனின் துருவ வளிமண்டலத்தில் உள்ள காந்தப்புலம் மற்றும் வெப்பநிலை நிலைமைகள் குறித்த தரவுகளை வழங்க வகை செய்யும்.
சூரியனின் துருவப் பகுதிகள் அதன் காந்தப்புலத்தின் பரிணாம வளர்ச்சியிலும், சூரியக் காற்றின் உருவாக்கத்திலும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும், பல்வேறு தசாப்தங்களாக ஆய்வுகள் மேற்கொண்டு வந்த நிலையிலும், சூரியனின் துருவங்களுக்கு அருகில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட வானொலி உமிழ்வான நுண்ணலை துருவப் பிரகாசத்திற்கான காரணத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322253®=48&lang=1
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323523)
வருகையாளர் எண்ணிக்கை : 4