அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மூலக்கூறு வடிவியலில் மேற்கொள்ளப்படும் சிறு மாற்றம், மேம்பட்ட உயிரிப் பொருட்களுக்குப் புதிய பாதையை உருவாக்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:05PM by PIB Chennai

மூலக்கூறு அமைப்பில் மேற்கொள்ளப்படும் மிகச் சிறிய மாற்றம், பெப்டைடு அடிப்படையிலான மூலக்கூறுகள் ஒழுங்கமைத்துச் செயல்படும் விதத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இத்தகைய ஆய்வுகள், உயிரி உணர்தல், உயிரிப் படமாக்கல், மேம்பட்ட  ஒளியியல் பொருட்கள், ஒளியியல் சார்ந்த மின்னணுவியல், மூலக்கூறு மின்னணுவியல் போன்ற பயன்பாடுகளுக்காக, தகவமைத்துக் கொள்ளக்கூடிய பெப்டைடு அடிப்படையிலான, நுண்ணியப் பொருட்களின் உருவாக்கத்திற்கு உதவிடும்.

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனமான, பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென்பொருள் அறிவியல் மையம் நடத்திய ஓர் ஆய்வில், ஒரு பெப்டைடுக்கும், ஒளிரும் பைரீன் அலகுக்கும் இடையே, ஒரே ஒரு மெத்திலீன் (–CH₂–) இடைவெளியைச் சேர்ப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்களால் மூலக்கூறு வடிவத்தையும், அதன் விளைவாக, அந்த அமைப்பின் சுய பண்பையும் மாற்றியமைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322249&reg=48&lang=1  

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323526) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी