தேசிய மனித உரிமைகள் ஆணையம்
அக்டோபர் 12-ல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 33-வது நிறுவன தின கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 3:17PM by PIB Chennai
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், தனது 33 வது நிறுவன தின விழாவை 2026 அக்டோபர் 12 அன்று புதுதில்லி விக்யான் பவனில் கொண்டாடுகிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, திரு சூர்ய காந்த் இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், நீதிபதி வி. ராமசுப்ரமணியன், பிற மூத்த அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
1993-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்த 33 ஆண்டுகால பயணத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், சட்ட அமலாக்கம், விசாரணைகள் ஆகியவற்றில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, தேவையான கொள்கை சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்து வருகிறது.
கடந்த 33 ஆண்டுகளில், ஆணையம் 24,33,716 வழக்குகளைக் கையாண்டுள்ளது. இதில் 3,100 வழக்குகள் தாமாகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவை. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 9,085 வழக்குகளில் ரூ. 274 கோடிக்கும் அதிகமான பண நிவாரணத்தை இது பரிந்துரைத்துள்ளது.
நிறுவன நாள் நிகழ்ச்சியை இந்த யூடியூப் இணைப்பில் நேரலையில் காணலாம்: யூடியூப் https://www.youtube.com/watch?v=LUjeVbvilu8
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321285®=48&lang=2
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323527)
வருகையாளர் எண்ணிக்கை : 5