வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிடிஐஎல்-ன் 9வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில், மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 11:33AM by PIB Chennai

புது தில்லியில் உள்ள பிரதமர் அருங்காட்சியகத்தில், 2026 அக்டோபர் 7 அன்று நடைபெற்ற வர்த்தக, முதலீட்டுச் சட்ட மையமான சிடிஐஎல்-ன் (CTIL) 9-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில், வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். அவர் தமது உரையில், நிலைத்தன்மை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற வளர்ந்து வரும் அம்சங்களும் உலகளாவிய வர்த்தக சூழலை மறுவடிவமைத்து வருவதாகக் கூறினார். ஆழ்ந்த சட்டச் சிந்தனை முன்னெப்போதையும் விட முக்கியமானது என்றும், இத்துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக சிடிஐஎல் உருவெடுப்பதற்கு பங்களிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிடிஐஎல் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, இந்நிறுவனம் தனது தொடர்ச்சியான, தீவிரமான பணிகளின் மூலம் அரசு, தொழில்துறை, சட்டத் துறையினர் ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.  சட்டப் பகுப்பாய்வு மூலம் வர்த்தகத் துறைக்கு சிடிஐஎல் ஆற்றும் பங்களிப்புகளை அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321175&reg=3&lang=1

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323535) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati