நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள ஹெச்ஐஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தை பணமாக்குவதற்காக என்எல்எம்சி, ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 2:13PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நிலப் பணமாக்கல் கழகமான என்எல்எம்சி (NLMC), புது தில்லி நஜாஃப்கர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள, ஹெச்ஐஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தைப் பணமாக்குவதற்காக, மின்னணு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஏலத்தில் பங்கேற்கத் தகுதியான ஏலதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுளது. கடந்த இரண்டு மாதங்களில் என்எல்எம்சி-யால் விளம்பரப்படுத்தப்பட்ட மூன்றாவது மின்னணு ஏலம் இதுவாகும். இது அரசின் நிலப் பணமாக்கல் திட்டங்களுக்கு ஒரு தீவிர உத்வேகத்தை அளிக்கிறது.

சுமார் 5.119 ஏக்கர் பரப்பளவும், ஏறத்தாழ 20,722.93 சதுர மீட்டர் அளவும் கொண்ட இந்த நிலப்பகுதி, வெளிப்படையான, போட்டித்தன்மை வாய்ந்த மின்னணு ஏல செயல்முறை மூலம் முழு விற்பனைக்கு வழங்கப்பட உள்ளது. ஹெச்ஐஎல் (இந்தியா) லிமிடெட் சார்பாக என்எல்எம்சி இந்த பணமாக்கும் செயல்முறைக்கு உதவுகிறது.

ஏல விவரங்கள் தொடர்பாக nlmc.enivida.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321258&reg=3&lang=1

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323544) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu