மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்திய மொபைல் மாநாட்டில், மின்னணுவியல் அமைச்சகத்தின் அரங்கம், இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 3:01PM by PIB Chennai

உலகம் முழுவதிலுமிருந்து தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், புதுமைப் படைப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைக்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) - 2026 எனப்படும் மாநாடு, 2026 அக்டோபர் 07 அன்று புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் தொடங்கியது.

அக்டோபர் 10 வரை நடைபெறும் இந்நிகழ்வு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் குறித்த உரையாடலுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.

மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஐஎம்சி 2026 நிகழ்வில், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, மக்கள் சேவைகள், மொழித் தொழில்நுட்பம், தரவுப் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், இணைய உள்கட்டமைப்பு, மேம்பட்ட ஆராய்ச்சி ஆகிய துறைகளில் உள்ள பல்வேறு வகையான டிஜிட்டல் இந்தியா தொடர்பான முன்முயற்சிகளைக் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு பிரத்யேக அரங்கத்தை அமைத்துள்ளது.

 ஆதார், டிஜிலாக்கர், உமாங் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் இந்த அரங்கில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் சேவைகளைத் தடையற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றுகின்றன என்பதை நிரூபிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321282&reg=48&lang=2

***

TV/PLM/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323559) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Assamese