சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இஆர்எம்இடி கூட்டமைப்பு குறித்த தேசிய மாநாடு - தேசிய மருத்துவ நூலகம் நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 12:15PM by PIB Chennai
சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருத்துவ நூலகம், மருத்துவத் துறையில் மின்னணு வளங்கள் எனப்படும் இஆர்எம்இடி கூட்டமைப்பு குறித்த 5-வது ஒருநாள் தேசிய பயிற்சியையும் மாநாட்டையும் இன்று (09.10.2026) புது தில்லியில் உள்ள தேசிய மருத்துவ நூலகத்தில் ஏற்பாடு செய்தது. சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல், மருத்துவக் கல்வி, ஆதார அடிப்படையிலான மருத்துவப் பயிற்சி ஆகியவற்றில் டிஜிட்டல் வளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், “டிஜிட்டல் சுகாதார வளங்கள்: நூலகங்கள் மூலம் அணுகலை மறுவரையறை செய்தல்” என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.
சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் வினோத் கோட்வால் உள்ளிட்டோர் தொடக்க அமர்வில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றின் அடித்தளங்களை வலுப்படுத்துவதில் தேசிய மருத்துவ நூலகத்தின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். தேசிய மருத்துவ நூலகத்தின் கட்டமைப்பு 93 மருத்துவக் கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கும் இதன் சேவையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மருத்துவத் துறையில் தொடர்ச்சியான கற்றலும் தொழில்முறை மேம்பாடும் இன்றியமையாதவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321201®=3
----
TV/PLM/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323561)
வருகையாளர் எண்ணிக்கை : 7