• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்தியாவை வல்லரசாக்க இரவு, பகல் பாராமல் பிரதமர் திரு நரேந்திர மோடி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்: மத்திய அமைச்சர் திரு. திரு ராம்தாஸ் அத்வாலே

प्रविष्टि तिथि: 20 JAN 2023 5:28PM by PIB Chennai

இந்தியாவை வல்லரசாக்க இரவு, பகல் பாராமல் பிரதமர் திரு நரேந்திர மோடி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு. திரு ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். மத்திய அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவுள்ள 116 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே சென்னையில் இன்று வழங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 15 மத்திய அரசுத் துறையில் உள்ள 29 பதவிகளுக்காக நடத்தப்பட்டது.  

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற பிரதமரின் வேலை வாய்ப்புத் திருவிழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்துத் தொடங்கி வைத்தார். பணிநியமன ஆணைகளைப் பெற்றவர்களுக்கு இடையே மேலும் பேசிய மத்திய இணையமைச்சர், தற்போது பணிநியமன ஆணைகளை பெற்றவர்கள் நல்ல குடிமக்களாக திகழ்வதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் காரணம் தான் என்றும் கூறினார். வாழ்க்கையில் மேன்மை நிலையை அடைந்த பிறகு பெற்றோர்களை அவர்கள் கைவிடக்கூடாது என்று மத்திய இணையமைச்சர்  வலியுறுத்தினார். 

நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், வெகு விரைவில் இந்தியா வல்லரசு நாடாகும் என்றும் அதற்காக நமது பிரதமர் இரவு பகல் பாராமல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்  என்றும் அவர் கூறினார். உலக அளவில் பொருளாதார மேம்பாட்டில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது அமைச்சர் அத்வாலே மேலும் கூறினார்.

புதிதாக அரசுப் பணியில் சேருபவர்களுக்கு கர்மயோகி பிராரம்ப்  என்ற ஆன்லைன் மூலம் ஒருங்கிணைப்பு வகுப்புகள் நடைபெறும். இது அவருக்கு பணி தொடர்பான அனுபவங்களைக் கற்க உதவிகரமாக இருக்கும் என்றார்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மத்திய அரசின் இளநிலைப் பொறியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள், காவலர், சுருக்கெழுத்தாளர், இளநிலை கணக்காளர், கிராமப்புற தபால் ஊழியர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூகப் பாதுகாப்பு அலுவலர், தனிச்செயலர். பல்துறை அலுவலர் மற்றும் பல்வேறு துறைகளில் நாடு தழுவிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நபர்கள் பணியில் சேரவுள்ளனர்.

*********

AP/SG/GS/RJ/KRS


(रिलीज़ आईडी: 1892504) आगंतुक पटल : 131
Link mygov.in
National Portal Of India
STQC Certificate