• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நிறைவுற்ற திட்டங்களை மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 22 JAN 2023 6:09PM by PIB Chennai

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட விரிவுரைக் கூட்டரங்கின் இரண்டாவது தளத்தை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்துறை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று திறந்து வைத்தார்.

மேலும் உற்பத்திப் பொறியியல், இயந்திரப் பொறியியல், உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் ஆகிய துறைகளின் இணைப்புக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.

விரிவுரைக் கூட்டரங்கின் மேல்தள கட்டிடம் ரூ. 14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிலையில் இணைப்புக் கட்டிடங்கள் ரூ. 64 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளன.

நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர், தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் எண்ணற்ற சாதனைகளையும், புதிய கல்விக் கொள்கையின் சிறப்பையும், அதனை நிறைவேற்றுவதில் இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும்  மேற்கோள் காட்டினார்.

மேலும், கிராமப்புறத்தை சேர்ந்த திறன்மிகு மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கும் இக்னைட் (IGNITTE) குழுவை அவர் பாராட்டினார்.

தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் திருமதி. அகிலா பேசுகையில்அமைச்சகத்தின் தொடர்ச்சியான ஆதரவோடு நிறுவனத்தின் வைரவிழா ஆண்டில் ஆராய்ச்சிப் பூங்கா அமைக்கும் திட்டம், மேக் இன் இந்தியா திட்டத்தின் நீண்ட கால நேர்மறை தாக்கம் பற்றி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தேசிய தொழில் நுட்பக் கழக நிர்வாகக் குழுத் தலைவர் திரு. பாஸ்கர் பட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

*****

 

SMB / TV / DL



(Release ID: 1892838) Visitor Counter : 85


Link mygov.in