• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

"தென்னீரா" பானம் இந்தியாவிலிருந்து முதன்முறையாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி

प्रविष्टि तिथि: 05 APR 2023 6:34PM by PIB Chennai

உலகின் முதல் மற்றும் சிறந்த பொருளான "தென்னீரா" பானம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த தென்னீரா பானத்தில் உடல் நலத்திற்கு தேவையான தாது பொருட்களும், அமினோ அமிலங்களும், வைட்டமின்களும், ஆக்ஸிஜனேற்ற மாற்றி போன்ற முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன.  இதனைப் பருகுவதன் மூலம் உடனடியாக ஆற்றல் மேம்பாடு அடைகிறது. மேலும், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களும் இதனை எடுத்துக்கொள்ளலாம். மேலும் அனைத்து வயது பிரிவினரும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த முதல் ஏற்றுமதியை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடோ) தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து இ.ஆ.ப, அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் நடந்த விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், இந்த தென்னீரா பானம் தமிழகத்தின் தனித்துவமான தயாரிப்பு. தற்போது அபேடோ மூலம் அமெரிக்காவிற்கு இது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதன் மூலம் அபேடா குழு விவசாயிகள் அதிக பயன் அடைவர். மேலும் தமிழக அரசுடன் இணைந்து இந்த ஏற்றுமதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு வர்த்தக ஆணைய கூடுதல் இயக்குநர் திருமதி ராஜலெட்சுமி தேவராஜ்,   அபெடா நிறுவனத்தின் பொது மேலாளர் (தென் மண்டலம்) திரு. ரவீந்திரா, உதவி பொது மேலாளர் திருமதி. ஷோபனா குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

****

AP/GS/RJ/KPG

 


(रिलीज़ आईडी: 1913994) आगंतुक पटल : 201
Link mygov.in
National Portal Of India
STQC Certificate