• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

"அழியாச் சகோதரத்துவத்தின் நினைவுகள் 2.0: சோழர்களின் கலாச்சார உலகம்" என்ற கருப்பொருளில் சர்வதேச மாநாடு

प्रविष्टि तिथि: 24 JUL 2023 10:00PM by PIB Chennai

நித்திய சகோதரத்துவத்தின் நினைவேந்தல் - சோழர்களின் கலாச்சார உலகம் 22 ஜூலை 2023 அன்று புதுச்சேரி அக்கார்டு ஹோட்டலில் பிரம்மாண்டமான முறையில் தொடங்கியது.

புதுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்து சமுத்திர மண்டல அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஜூலை 23, 2023 அன்று நடைபெற்ற விரிவுரையில் இந்திய கலாச்சாரம், குறிப்பாக சோழர் கலாச்சாரம், கட்டிடக்கலை, அவர்களின் கடல் வரலாறு மற்றும் அரசியல் கலாச்சாரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்னர். இணைப் பேராசிரியர், புதுவை பல்கலைக்கழக டாக்டர் நந்த கிஷோர் மாநாட்டை தொகுத்து வழங்கினார்.

 

இந்திய கலாச்சாரத்தை உயர்த்துவதற்கான விரிவுரைத் தொடரின் நோக்கத்தைக் குறிக்கும் 'கால பைரவ ஸ்தோத்திரம்' என்ற பரதநாட்டியத்தின் தெய்வீக நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வகணபதி வாழ்த்துரை வழங்க, புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் குர்மீத் சிங் மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஷாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் தொடக்கவுரை ஆற்றினார்.

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ மன்னனேய இந்திரேஷ் குமார் தொடக்கவுரை நிகழ்த்தினார். சோழர்கள் மற்றும் பண்டைய இந்தியா - சீனாவின் மறக்கப்பட்ட அல்லது அறியப்படாத வரலாறு மற்றும் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையேயான வர்த்தக தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.

 

இந்து சமுத்திர மண்டல அமைப்பின் பொதுச்செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ் ராவ் நன்றி கூறினார்.

இதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்களின் களரி, இசை, தெருக்கூத்து என பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தன.

இத்தகவலை உதவிப் பதிவாளர் திரு கே. மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

***

AP/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1942273) आगंतुक पटल : 119
Link mygov.in
National Portal Of India
STQC Certificate